நவராத்ரியின் முதல் மூன்று நாட்களும் தமோகுண நிறங்கொண்ட துர்காதேவியையும், சதுர்த்தி முதல் மூன்று நாட்களும் ரஜோகுண நிறங்கொண்ட திருமகள் வடிவையும் சப்தமி முதல் மூன்று நாட்கள் சத்வ குணமயமான வெண்ணிற ஸரஸ்வதி வடிவையும் பூஜை செய்கிறோம். நவராத்ரிப் பூஜை - book வாசகர்களின் நெடுநாளைய வேண்டுகோளின்படி எங்களது வெவ்வேறு பிரசுரங்களிலிருந்து நவராத்ரி சம்பந்தமான முக்கிய சுலோகங்களைத் தொகுத்து சிறப்பு நூலாக நவராத்ரிப் பூஜையை வெளியிட்டுள்ளோம். இந்நூலில் முக்கியமாக நவராத்ரி,ஸரஸ்வதி பூஜா விதிகளும், துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதி ஸஹஸ்ரநாமாவளிகளும் தரப்பட்டுள்ளன. இது பூஜைக்குகந்த நூலாக மட்டுமல்லாமல், பரிசளிக்கவும் சிறந்தது. ஸ்ரீ ராமனுக்கு இராவணனை சம்ஹாரம் செய்யும் பூரண வலிமையை கொடுக்கும் ' ஸ்ரீ பஞ்ச தசாக்ஷரி' என்ற ஸ்ரீ வித்யா மகா மந்திரத்தை வலது காதிலே உபதேசித்தார். அதிலிருந்து ஸ்ரீ ராமன், தேவி பக்தனாக மாறிப் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை முதல் நவமி முடிய ஒளியான ஒன்பது நாட்களிலும் ஸ்ரீ தேவியைப் பூஜித்ததாகச் சொல்லப்படுகிறது. ஸ்ரீ ராமன் அன்னையை இந்த ஒன்பது நாளும் இரவில் நியம நிஷ்டையுடன் பூஜை செய்தது முதல், இது சிறந்த நவராத்ரியாக ஒளிர்விட்டது. இராமனும் அன்னையை வழிபட்டு தசக்ரீவனை சம்ஹாரம் செய்தான். ஸ்ரீ கண்ணபிரானும் கூட பிருந்தாவனத்தில் இவ்விதமே நவராத்ரி பூஜை செய்து அன்னையின் அருளைப்பெற்றதாகக் கூறப்படுகிறது.
பன்பெயர் நாயகி
அம்பாள் அனேக அம்சங்களை உடையவள். யார் யார் எப்படி விரும்புகிறார்களோ அம்முறையில் அம்சங்களை ஏற்று அவள் காட்சி தருகிறாள். எங்கும் நிறைபொருளாகக் காணப்படும்போது அவள் பூரணி என்று அழைக்கப்படுகிறாள். சக்தி நிறைந்தவளாய், சர்வ வல்லமை பொருந்தியவளாய் போற்றப்படும்போது பராசக்தி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும், மூலப்பிரகிருதி என்றும் பெயரிடப்படுகிறாள். முத்தொழிலைச் செய்யுமிடத்து பிரம்மாணி, வைஷ்ணவி, ராத்ராணி என்று அவள் பெயர் படைக்கிறாள். சகுணப் பிரம்மம் அல்லது ஈசுவரனுக்கு ஒப்பாகும் போது துர்கை எனப்படுகிறாள். கால சொரூபிணியாகத் தோன்றுமிடத்துக் காளியாகிறாள். வித்தையின் வடிவமாகும்போது ஸரஸ்வதி என்றும், தனதான்ய வடிவெடுக்கும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். ஞாலத்தை ஆதரிக்கும் மகாதேவி, ஜகதாத்ரியாகவும், பவதாரிணியாகவும் போற்றப்படுகிறாள்.
ஞாயிறு
சைலப்புத்ரி ஆரோக்கியம் (பரமேஸ்வரி)
திங்கள்
மகாகெளரி சஞ்சலம் வாராது, மதிநலமும், மன நலமும் உண்டாகும்.
செவ்வாய்
ஸ்கந்தமாதா திருமணத் தடைநீங்கி, குழந்தைச்செல்வம் கிட்ட சந்திரகாந்தா தடைநீங்க, வாழ்வில் வெற்றிநடை போட
புதன்
காத்யாயணி கல்வி, கலையில் சிறக்க
வியாழன்
பிரம்மசாரிணி ஞானம், கல்வி, அமைதியான வாழ்வு (தபசு காமாட்சி இவள் வடிவே)
வெள்ளி
கூஷ்மாண்டா தீயவை விலகி, இனிமை பெருக
சனி
காலராத்ரி சங்கடம் நீங்கி, சுபகாரியம் நிகழ சித்தாத்ரி நினைத்த காரியம் நிறைவேற
இப்படி நவதுர்காவாக நவ நாட்களில் ஒளிர்விடுகிறாள் அன்னை. இதனால் தான் கன்யா பூஜையில் அந்தந்த நாளுக்குரிய தேவியாக பெண் குழந்தைகளை வரித்து பூஜை செய்கிறோம்..
துர்கா பூஜை
இமவானின் புத்ரியாக அவள் இறங்கி வரும் திருவிழாவே துர்கா பூஜைத்திருவிழாவாகப் போற்றப்படுகிறது. அப்படி அவள் வரும்போது லட்சுமி, ஸரஸ்வதி, கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் உடன் வருகிறார்கள். மனிதனின் நல்வாழ்வுக்குத் தேவையானஅத்தனை அம்சங்களும் கொண்ட சிறு சேனையின் தலைவியே அவள். அவளே அனைத்தும் ஒருங்கமைந்த சக்தி சொரூபம் செல்வத்தைப் பெருக்கும் சின்னமாக லக்ஷ்மி, கலைஞானங்கள் அளிக்க ஸரஸ்வதி, விக்னமின்றிச் செயல்பட கணபதி, ஆற்றலை வளர்க்க முருகன் இப்படி அம்பிகையின் அம்சங்களாகவே இந்த நால்வரையும் பார்த்துத் தொகுத்து வழிபடுவதுதான் துர்கா பூஜை. நிறைவாழ்வின் பொலிவுகளை விளக்குகின்ற சக்தியாக அவை அமைந்துள்ளன.
தேவிபாகவதம்
தக்ஷப் பிரஜாபதியின் மகள் தாட்சாயணி, தக்ஷன் விருப்பத்துக்கு மாறாக ஈசனை மணக்கிறாள் அவள். அதனால் தக்ஷன் ஈஸ்வரன்பால் வெறுப்புற்றான், தான் செய்யும் யாகத்துக்கு ஈசுவரனை அழைக்கவில்லை. எனினும் தாட்சாயணி கணவருக்காக நியாயம் கேட்டு அங்கே சென்றாள். தன்னையும் தன் கணவரையும் தந்தை நிந்திப்பதைக் கேட்டு மனம் பொறாது அங்கேயே உயிர்த்தியாகம் செய்தாள். இதனால் கோபம் அடைந்த சிவன் யாகத்தை அழித்து, தக்ஷனையும் சிரச்சேதம் செய்தார். உயிர் நீத்த தேவியின் உடலைத் தோள்மீது போட்டுக்கொண்டு திரியலானார். மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் அந்தப் புனித உடலைத் துண்டுகளாகும்படிச் செய்து சிவபிரானின் தாபத்தைத் தணித்தார். அப்படித் துண்டுகளாகிய தேவியின் உடல் பல இடங்களிலும் விழுந்தது. அப்படி மண்ணில் விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் எனப்போற்றப்படுகின்றன. சாக்தபீடங்கள் நான்கு, ஏழு, எட்டு, பத்து, பதினெட்டு, நாற்பத்து இரண்டு, ஐம்பது, ஐம்பத்து இரண்டு, நூற்றுஎட்டு என்று பலவிதமாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக அன்னையின் தேகம் அக்ஷரமயமானதால் அக்ஷரங்களின் எண்ணிக்கைப்படி ஐம்பத்தி ஒன்று எனச் சொல்லப்படுகின்றன. இந்த சாக்த பீடங்களும், மற்ற தேவிக்ஷேத்ரங்களும் சேர்ந்து பாரதநாட்டைப் புண்ணிய பூமியாக்குகின்றன.
தேவி மகாத்மியம்
தேவி மூன்று வடிவுடையவள் அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் காளிரூபம், லக்ஷ்மீ ருபம், ஸரஸ்வதி ரூபம் தேவர்கள் செய்த கடும் தவத்தினால், தன் சக்தி சேனைகளுடன் சென்று, சண்டாமுண்டன், ரக்த பீஜன், சும்ப-நிசும்பன், மகிஷாசுரன் போன்ற அசுர அரக்கர்களை கடும் போரிட்டு வதம் செய்த கதைகளின் தொகுப்பே
"தேவி மகாத்மியம்" எனப்படுவது.
தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தோ அல்லது முழுவதுமாகவோ நவராத்ரி நாட்களில் படிப்பவர்கள், தங்கள் குலத்தின் பாவ மூட்டைகளை எரிக்கிறார்கள். எவன் ஒருவன் இந்தத் தேவி மகாத்மியம் படிக்கப்படும் இடத்தில் அமர்ந்து கேட்கிறானோ அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். பணக்கவலையும், மனக்கவலையும், தீர 'தேவி மகாத்மிய' பாராயணமே சிறந்த வழி.
கொலு
வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் நவராத்ரியில் புரட்டாசி மாத நவராத்ரியை "கொலு" வைத்துக் கொண்டாடுகிறோம். ப்ரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜன் முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்து பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக 'கொலு' என்று புரட்டாசி அமாவாசையன்று , நல்ல சுப நேரத்தில் வைப்பதாக ஐதீகம்.
இந்தியாவில் நவராத்ரி
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நவராத்ரி விழா ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. அதே போலக்
கர்நாடகத்தில் தசராவென்றும்,
தமிழ்நாட்டில் நவராத்ரி என்றும் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள், சிற்பிகள், வித்வான்கள், தொழிலாளர்கள் என்று அனைவரையும் ஈடுபடுத்தும் மகோன்னத பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இபபடி நாடுமுழுவதும், எல்லாப் பிரிவினரையும் ஈடுபடுத்தும் தனிப்பெருமை நவராத்ரி விழாவிற்கு இருக்கிறது. மரப்பாச்சிகளால் ஆன கொலுவையே மைசூர் வாசிகள் நவராத்ரியில் வைத்து மகிழ்கிறார்கள்
மகாராஷ்டிரத்தில் நவராத்ரி முதல் நாளன்று, சிறு மண்தொட்டிகளில் நவதான்யங்களைத் தூவி பாலிகை வளர்ப்பார்கள். நவராத்ரி ஒன்பது நாட்களும் தேவி பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடி, விஜயதசமியன்று பெண்கள், பாலிகையை ஆற்று நீரில் கரைத்துவிட்டு வருகிறார்கள்.
நாகை மாவட்டம்
கூத்தனூரில் உள்ள ஸரஸ்வதி கோயில் பிரபலமானது. இங்கு சரஸ்வதி பூஜையன்று அம்பாளின் பாதங்கள் வெளிமண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்வர். அன்று எல்லோரும் தேவியின் பாதங்களுக்கு மலர் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
ஹிமாச்ச லத்திலுள்ள 'குலு' என்னும் பகுதியில் உள்ள சிறிய கோயில்களிலிருந்து விக்ரஹங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, ரகுநாத் ஜி மந்திர் முன்பு நவராத்திரி விழா நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் பொது இடங்களில் கூட மகிஷாசுரமர்த்தினி திருவுருவம் வைக்கப்பட்டு, தசரா பூஜைகள் செய்யப்படுகின்றன. விஜயதசமி அன்று பூஜை செய்யப்பட்டு சிலைகள் ஊர்வலமாக வீதிகளில் உலாவந்து கடலில் கரைக்கப்படுகின்றன.
வடநாடுகளில் நவராத்ரி நாட்களில் 'ராம் லீலா' என்று ம் நிகழ்ச்சி பொது இடங்களில் நடக்கிறது. துர்கை மகிஷாசுரனை வென்ற நாள் விஜயதசமி என்று கூறப்பட்டாலும், சில இடங்களில் ராமன் ராவணனை வதைத்த தினமாகவும் கொண்டாடப் படுகிறது.
வெளிநாட்டிலும் ஸரஸ்வதி வழிபாடு
ஜப்பான் நாட்டில் ஸரஸ்வதியை ' பென்டன்' என்றும் திபெத் நாட்டில் ஸரஸ்வதியை 'யங்சன்ம' என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறார்கள் பாலித்தீவுப்பகுதியில் 'கலுங்கன்' என்று ஸரஸ்வதியைத் துதிக்கின்றனர்.
நவராத்ரியில் செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
ஒன்பது நாட்களும் "வபனம்" (முடி நீக்குதல்) ஆகாது: மருந்துண்ணல் கூடாது. பொய் நீக்கிய வாழ்வும் அன்னை புகழ் பேசும் நாவும் கொண்டு விளங்கவேண்டும்.
இரவில் பட்டினி இருத்தல் வேண்டும். ஒரு சிலர் பகலெல்லாம் நோன்பு இருந்து, இரவில் அன்னையின் வழிபாடு நிறைந்த பின் சிற்றுணவு கொள்வதுண்டு. இதுவும் ஏற்றதே! இந்த ஒன்பது நாட்களிலும் பானகமும், தேனும் நிவேதிப்பது மிகவும் அவசியம். இக்காலத்தில் வீட்டிற்கு வரும் சுவாசினிகளை ஜன்ம விரோதியாக் இருந்தாலும் சக்திவடிவமாகவே பாவித்து தாம்பூலம் அளித்து அவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்தல் வேண்டும்.
பலன் தருபவை:
நவராத்ரி
நிவேதனம்
மலர்கள்
முதல் மூன்று நாட்கள்
துர்க்கா அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமமும் :: எலுமிச்சம் பழசாதம், எள்ளுச்சாதம், தயிர்சாதம்
சிவப்பு, மஞ்சள், நீல நிறம்
அடுத்த மூன்று நாட்கள்
லக்ஷ்மி அஷ்டோத்ரமும், ஸஹ ஸ்ர நாமமும் :: சர்க்கரை அன்னம், பால்சாதம், கற்கண்டு அன்னம்
செண்பகப்பூ, ரோஜா, கதம்பம், வில்வதளம், செந்தாமரை
அடுத்த மூன்று நாட்கள்
ஸரஸ்வதி அஷ்டோத்ரமும், ஸஹ ஸ்ர நாமமும் :: வெண்பொங்கல், தேங்காய்சாதம், பால்சாதம்
முல்லை, நந்தியா வர்த்தம், வெண்தாமரை, துளசி, மல்லிகை