- 06-05-2008

'க்ஷயம்' என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள். சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் யுகாதிதான். 'மாலோடு' 'திரு' சேர்ந்து, மஹாவிஷ்ணு 'திருமால்' ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள். இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!


  - 01-04-2008

பலரின் வேண்டுகோளுக்கிணங்க மஹாகவி காளிதாஸரின் மகத்தான இதிகாசத்தை இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் “லிப்கோ” ஸ்தாபகர் சர்மாஜி நூற்றாண்டு நினைவுப் பதிப்பாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். ரகுவம்ச மஹா காவ்யம் ஸ்ரீ வே.ஸ்ரீ.வேங்கடராகவாச்சார்யர் எழுதிய ஒப்பற்ற நூல்! ஸம்ஸ்க்ருத மூலம், பதவுரை, கருத்துரை, விளக்கவுரை 1216 பக்கங்கள். விலை: ரூ.160


  - 06-02-2008

இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தென்னிந்தியர்களுக்கு, கொண்டாட்டமும் குதூகலமும்தான்.ஆடி மாதப் பிறப்பு முதல் தை மாதப் பிறப்புவரை பண்டிகைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கும் ஆவணியில் கண்ணன் பிறப்பு, புரட்டாசியில் தஸரா, ஐப்பசியில் தீபாவளி கார்த்திகையில் தீபத் திருவிழா, தையில் மகர சங்கராந்தி என மக்கள் புத்தாடை உடுத்தி, பலவித பலகாரங்களூடன் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வர்.பெரும்பாலான பண்டிகைகள், புராண இதிகாஸ நாயக, நாயகிகளை உதாரண புருஷர்களாய்ச் சித்தரித்து, அக்கதைகளைச் சார்ந்தே கொண்டாடப்பட்டு வருகின்றன....


  - 08-01-2008

31 வது சென்னைப் புத்தகக் காட்சி : 4.1.2008 முதல் 17.1.2008 வரை வழக்கம்போல் இந்த ஆண்டும் சென்னையின் புத்தக ஆர்வலர்களுக்காக, தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை ஒட்டி, ப்ரத்யேக புத்தகக் காட்சி புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) சென்னை - 30, வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தகப்ரியர்கள் தங்களது ரசனைக்கேற்ப புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி மகிழலாம்


  - 22-11-2007

தீப வழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது. சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீப வழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர். இந்தியாவில் வடக்கில் தீப வழிபாடு 'தீபாவளி' என்றும் , தெற்கே தீப வழிபாடு 'கார்த்திகை தீபம்' என்றும் கொண்டாடப்படுகிறது.தீப வழிபாட்டில் சிறப்பானது '' கார்த்திகை தீபம் ஆகும்." கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவதுதான் கார்த்திகை தீபத் திருவிழா. தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு,திங்கள்,நெருப்பு இம்மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள். அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு'என்று அழைக்கப்படுகிறது.இவை அறம், பொருள்,வீடு,இன்பம் என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.இவையே சரியை, கிரியை,யோகம்,ஞானம் ஆகும். இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம். முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர்.அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது. ஞானஒளியைத் தரும் இக்கார்த்திகை மாதத்தில், கந்தனின் கதையை விரிவாக உணர்த்தும் எங்களது வெளியீடான "கந்த புராணம்" மற்றும் மணியான பாடல்கள் அடங்கிய "சைவத்திரு முறைகள்" போன்ற புத்தகங்களைப் படித்து அண்ணாமலையானின் பரிபூரண அருளைப்பெறுவோமாக!


  - 06-11-2007

தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமீயும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும். எல்லா நதிகள், ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும், நீர்நிலைகளிலும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா? " என்று வினவி விசாரிக்கிறோம்.


1 2 3