இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தென்னிந்தியர்களுக்கு, கொண்டாட்டமும் குதூகலமும்தான்.ஆடி மாதப் பிறப்பு முதல் தை மாதப் பிறப்புவரை பண்டிகைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கும்

ஆவணியில் கண்ணன் பிறப்பு, புரட்டாசியில் தஸரா, ஐப்பசியில் தீபாவளி கார்த்திகையில் தீபத் திருவிழா, தையில் மகர சங்கராந்தி என மக்கள் புத்தாடை உடுத்தி, பலவித பலகாரங்களூடன் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வர்.பெரும்பாலான பண்டிகைகள், புராண இதிகாஸ நாயக, நாயகிகளை உதாரண புருஷர்களாய்ச் சித்தரித்து, அக்கதைகளைச் சார்ந்தே கொண்டாடப்பட்டு வருகின்றன....

மேலும், இப்பண்டிகைகள் கல்வி, அறிவு, செல்வம், வீரம், மனஉறுதி, தைரியம், நேர்மை, ஒற்றுமை, ஒழுக்கம் போன்ற உயரிய பண்புகளை வளர்த்துக்கொள்ளவும், இந்திய கலாச்சாரத்தை ஆணித்தரமாய் வலியுறுத்தும் வகையிலுமே அமைந்துள்ளன

எனவே, ஆடம்பரத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் முக்கியத்துவம் தராமல் பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படை நோக்கத்தை உணர்ந்துகொண்டு செயல் படுவது நலம். அந்நாட்களில் பெரியவர்களின் ஆசிகளைப் பெற்று நல்ல பல புத்தகங்களை வாசித்து நற்கதைகளைக் கேட்டு லோகக்ஷேமத்திற்கு இறையருளை வேண்டுவதே உண்மையான கொண்டாட்டமாகும்.